Saturday 19 May 2018


" சிறு தானிய உணவும், ஆரோக்கியமும் "

"உணவே மருந்து" என்பார்கள் நமது முன்னோர்கள்.அதற்கு அவர்கள் உணவில் இருந்த ஊட்டச்சத்துக்களே காரணம்.

ஆனால், வளரும் இளைஞர்களோ இன்று மருந்தையே உணவாக உண்ணும் நிலைக்குத் தள்ளப்பட்டு வருகிறார்கள்.இதற்கு முக்கியக் காரணங்களாக இருப்பவை, உடல் உழைப்புக் குறைவு, மாறி வரும் உணவுப் பழக்கம்."ஃபாஸ்ட் ஃபுட்" கலாச்சாரம் தான்.இவை  அனைத்தும் நோய்களுக்கும் ஆதாரமாய் மாறி வருகிறது.

சிறுதானியங்களைச் சமைத்துச் சாப்பிடுபவர்கள் இன்றும் கிராமங்களில் இருக்கின்றனர்.அவர்களிடம் நீரிழிவு,உடல் பருமன், இதய நோய் போன்ற உபாதைகள் இல்லை.

அரிசி, கோதுமையைத் தவிர்த்து  சிறு தானியங்கள் என்றால் நமக்கு உடன் ஞாபகத்திற்கு வருவது கேழ்வரகுதான்.ஆனால், அதைத் தாண்டி, சாமை,வரகு,குதிரைவாலி,தினை, கம்பு ஆகியவையும் சிறுதானிய வகையைச் சேர்ந்தன ஆகும்.

நம்மில் பலருக்கு சிறுதானியங்களை சமைப்பது எப்படி? அதனால் என்னென்ன சமைக்கலாம்? என்றெல்லாம் தெரியவில்லை.ஆனால்...அரிசியிலும், கோதுமையிலும் செய்யப்படும் அனைத்து உணவுகளையும் சிறுதானியங்களிலும் சமைக்கலாம்.

உதாரணத்திற்கு, சாமை தயிர் சாதம்,குதிரைவாலி பொங்கல் முதலியன.சிறுதானியங்களை சமைக்கையில் கவனத்தில் நாம் கொள்ள வேண்டியவை...அவை அளவிலும் சிறிதாக இருப்பதால் தேவையான தண்ணீர்,வேகவிடும் நேரம்,பக்குவம் ஆகியவை தெரிய வேண்டும்.ஆனால் நாளாவட்டத்தில் இந்த பக்குவம் நமக்குத் தெரிந்துவிடும்.

இந்த சிறுதானியங்களில், இரும்பு,மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், கால்சியம் போன்றவை உள்ளன.இத்தானிய உணவு வகைகள் குளுக்கோசை சிறிது சிறிதாக நீண்ட நேரத்திற்கு வெளியிடுவதால் உடலில் சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது."குளூட்டன்" இத்தானியங்களில் அறவே இல்லை.

அரிசி,கோதுமை போன்ற உணவை உண்ணுகையில் உண்டாகும் அசிடிட்டி, உடல் பருமன், புற்றுநோய் ஆகியவை சிறுதானியங்கள் உண்ணும்போது ஏற்படுவதில்லை.

ராகி, கம்பு  போன்ற தானியங்கள் ட்ரைகிளிசிரைட் மற்றும் கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்த உதவுகிறது.உணவின் செரிமானமும் எளிதில் நடைபெறுகிறது.

இனி ஒவ்வொரு சிறுதானியங்களின் சிறப்பைக் காணலாம்..

சிறுதானியங்களில் அதிக சக்தி மிகுந்தது கேழ்வரகு.இதில் புரதம்,தாது உப்பு,சுண்ணாம்பு சத்து, இரும்புச் சத்து உள்ளது.இதை உண்ணுவதால் உடல்வலிமை அதிகரிக்கும்.சர்க்கரை நோயாளிகள் கேழ்வரகை அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.

சாமை, மலச்சிக்கலைப் போக்கும், ஆண்மை குறைபாடை நீக்கும்

கம்பு, ஆரோக்கியமான தோலுக்குச் சிறந்தது.கண்பார்வைக்கு முக்கியமான வைட்டமின் ஏ உருவாக முக்கியக் காரணியான பீட்டாகரோட்டின் உள்ளது.நல்ல கொழுப்பு இதில் 70 சதவிகிதம் உள்ளது.

வரகில், புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ளது.இது உடல் எடையைக் குறைக்கும்.பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.வரகைக் கோயில் கும்பத்தில் வைப்பார்கள்.ஏனெனில் அதற்கு இடியையும் தாங்கும் சத்து உள்ளதால் தான்.வரகு, சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது.மூட்டுவலியை நீக்குகிறது.கல்லீரல் செயல்பாடுகளைத் தூண்டி..கண், நரம்பு நோய்களைத் தாக்கும் குணம் கொண்டது இத் தானியம்.

குதிரைவாலியில் நார்ச்சத்து அதிகம்.நம் அன்றாடத் தேவைக்கான பல ஊட்டச்சத்துக்கள் உள்ளன.முக்கியமாக எலும்புக்கு வலு சேர்க்கும் தானியம் இது.கனிமச்சத்தும், பாஸ்பரசும் நம் உடலுக்கு அவசியமான சத்து.இது சுண்ணாம்புச் சத்துடன் சேர்ந்து எலும்பு ,பல் வளர்ச்சிக்குத் தேவையான கால்சியம் பாஸ்பேட்டாக மாற்றுகிறது.

தினை சத்துமிக்கது.இதயத்தை வலிமைப் படுத்துவதில் இத்தானியம் முதலிடம் வகிக்கிறது.

ஆகவே நண்பர்களே! மருந்து வாங்கச் செலவிடும் பணத்தில் சிறுதானியங்களை வாங்கிச் சமைத்து உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

நீங்களும் வளமாக வாழ்வதுடன்..உங்களது அடுத்தத் தலைமுறையையும் ஆரோக்கியத்துடன் உருவாக்குங்கள்.


                    காஞ்சனா ராதாகிருஷ்ணன்

53-H,பீச் ரோடு  
"க்ஷேத்ரா" 
கலாக்ஷேத்ரா காலனி
பெசன்ட் நகர்
சென்னை - 90  

------------------------------------                                                        




1. தினை ( Foxtail Millet)  இட்லி

தேவையானவை:
தினை 3 கப்
உளுத்தம்பருப்பு 3/4 கப்
அவல் 1/4 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
----


செய்முறை:

தினையை தனியாகவும்.உளுத்தம்பருப்பு வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
அவலை அரை மணிநேரம் ஊறவைத்தால் போதும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,அவல் மூன்றையும் சேர்த்து நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
தினையை தனியாக அரைத்து அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு,வெந்தயத்துடன் தேவையான உப்பு சேர்த்து கலக்கவேண்டும்.
ஆறு மணிநேரம் கழித்து மாவு புளித்துவிடும்.பின்னர் இட்லியாக வார்க்கலாம் தினையில் புரோட்டீன்,நார்சத்து உள்ளது.
---------------------------

2.   சாமை ( little millet) கிச்சடி
தேவையானவை:

 சாமை 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
வெங்காயம் 1
தக்காளி 1
பச்சைமிளகாய் 2
சீரகம் 1/2 தேக்கரண்டி
பெருங்காயம் 1 துண்டு
மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி
எலுமிச்கம்பழம் 1
கொத்தமல்லித்தழை சிறிதளவு
நெய் 1 மேசைக்கரண்டி
உப்பு எண்ணெய் தேவையானது
--------
செய்முறை:


சாமையை 30 நிமிடம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் தனித்தனியே  சாமையையும் பயத்தம்பருப்பை மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவேண்டும்.(4 விசில்)

அடுப்பில் கடாயை வைத்து நெய்யில் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் பெருங்காயத்தை பொரித்து குறுக்கே வெட்டிய பச்சைமிளகாயையும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தையும் சேர்த்து வதக்கவேண்டும்.
பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த சாமையையும் பயத்தம்பருப்பையும் தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவேண்டும்.
கிச்சடி கொதித்தவுடன் அடுப்பிலிருந்து இறக்கி எலுமிச்சம்பழத்தை பிழியவேண்டும்.
கொத்தமல்லித்தழையை தூவ சாமை கிச்சடி ரெடி.
------------

3. வரகு (Kodo Millet) சர்க்கரைப்பொங்கல்
தேவையானவை:

வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
நெய்  1/4 கப்
முந்திரிபருப்பு 10
 ஜாதிக்காய்1 துண்டு
குங்குமப்பூ 1/4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
பால் 1 மேசைக்கரண்டி
--------
செய்முறை:




ஒரு வாணலியை எடுத்துக்கொண்டு  வரகரிசியை சிறிது நெய் சேர்த்து வறுக்கவும்.

வெல்லத்தை அரை கப் தண்ணீரில் அடுப்பில் வைத்து கரையவிட்டு வடிகட்டவும்.

ஒரு அகண்ட கனமான பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் 3 கப் தண்ணீர் விட்டு,தண்ணீர் நன்கு கொதித்தவுடன்    வறுத்த வரகசரிசியைப்போட்டு அடிபிடிக்காமல் நன்கு கிளறவும்.அரிசி நன்றாக  வெந்தவுடன் வடிகட்டிய வெல்லத்தைப்போட்டு medium flame ல் ஒரு பத்து நிமிடம் வைத்து கிளறவும். (வரகரிசி வேகுவத்ற்கு பத்து நிமிடம் ஆகும்).

ஒரு கிண்ணத்தில் பாலை எடுத்துக்கொண்டு அதில் ,குங்குமப்பூ,ஏலக்காய் இவற்றைப்போடவும்.ஜாதிக்காய் துண்டை நெய்யில் வறுத்து பொடிசெய்து அதையும் பாலில் சேர்த்து கரைத்து பொங்கலில் சேர்க்கவும். முந்திரிபருப்பை நெய்யில் வறுத்து சேர்க்கவும்.மீதியுள்ள நெய்யை உருக்கி பொங்கலில் சேர்த்து நன்றாக கிளறி இறக்கவும்
---------------------------------------

4. கம்பு  (Pearl millet) அடை
தேவையானவை:                                             


கம்பு 1 கப்
துவரம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு 1/4 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
மிளகாய் வற்றல் 2
பச்சைமிளகாய் 2
பெருங்காயம் ஒரு துண்டு
வெங்காயம் 1
புதினா ஒரு கொத்து
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:


கம்பை தண்ணீரில் நான்கு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
மற்ற பருப்புகளை இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

ஊறவைத்த கம்பு,பருப்புகளை வடிகட்டி அதனுடன் பெருங்காயம்,மிளகாய் வற்றல்,பச்சைமிளகாய்,பெருங்காயம்,தேவையான உப்பு சேர்த்து நைசாக அரைக்க வேண்டும்.
அரைத்த மாவில் வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
புதினாவையும்,கொத்தமல்லியையும் பொடியாக நறுக்கி சேர்க்கவேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாகக் கலக்கவேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டியில் அடை மாவை ஊற்றி சற்று கெட்டியாக வார்க்கவேண்டும்.அடை ஒரே பதத்தில் வேகுவதற்காக நடுவில் ஒரு துளையிட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு சற்று நேரம் கழித்து எடுக்கவும்.

இந்த கம்பு அடையை  இட்லி மிளகாய் பொடியுடன் சாப்பிடலாம்.

வேர்க்கடலை,பொட்டுக்கடலை,பச்சைமிளகாய் சேர்த்த சட்னியுடனும் சாப்பிடலாம்.
-------------------------------------


 5. சாமை கஞ்சி ( little millet)
புன்சை சிறுதானியங்களில் சிறந்த தானியமாகக் கருதப்படுவது சாமை.
சர்க்கரை நோயை கட்டுப்பாட்டில் கொண்டுவர முக்கிய பங்கு வகிப்பது சாமை.
அரிசியைக் காட்டிலும் ஏழு மடங்கு நார்சத்து கொண்ட தானியம் சாமை.
இதில் இரும்புச் சத்து அதிகம் உள்ளது.
-------
சாமை கஞ்சிக்கு தேவையானது:
                                                                         சாமை

சாமை 1 கப்
சின்ன வெங்காயம் 10
மோர் 1 கப்
உப்பு தேவையானது
------
செய்முறை:


ஒரு கப் சாமையை மூன்று கப் தண்ணீருடன் குக்கரில் மூன்று விசில் வரும்வரை வைத்து எடுக்கவேண்டும்.
ஆறின பிறகு குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட பாத்திரத்தில் வைத்து மோரைக்கடைந்து தேவையான உப்புடன் சேர்க்கவேண்டும்.சாமையும் மோரும் சேர்ந்து கட்டியில்லாமல் கலக்கவேண்டும்.
சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கி இதனுடன் சேர்த்து சாப்பிடலாம்.
சாமை கஞ்சியை காலை உணவாக எடுத்துக்கொள்ளலாம்.
---------------------------------


 6. குதிரைவாலி (Banyard Millet) பொங்கல்

பாரம்பரிய சிறுதானிய வகைகளில் ' குதிரைவாலி" யும் ஒன்று.இதில் புரதம்,இரும்புச்சத்து,உயிர்ச் சத்துக்கள் அதிகம்.
அளவில்லாத நார்சத்தை சுமந்து இருக்கும் " குதிரைவாலி " ஒரு அற்புதமான தானியம்.

தேவையானவை                   
                                                    
குதிரைவாலி 1 கப்
பயத்தம் பருப்பு 1/4 கப்
மிளகு 15
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
முந்திரிபருப்பு 10
நெய் 1/4 கப்
தண்ணீர் 3 கப்
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு தேவையானது
-------
செய்முறை:


பயத்தம்பருப்பை தனியே குக்கரில் வேகவைத்து எடுத்துவைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் மூன்று கப் தண்ணீர் ஊற்றி நன்கு கொதித்தவுடன் ஒரு கப் குதிரைவாலியை
சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து வேகவைக்கவேண்டும்.பத்து நிமிடத்தில் வெந்துவிடும்.குக்கரில் வைக்கவேண்டாம்.
தனியே வேகவைத்து எடுத்து வைத்த பயத்தம்பருப்பை தேவையான உப்புடன்  இதனுடன் சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும். அல்லது மிளகை அப்படியே பொரித்துப் போடலாம்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

----------------------------

பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.
தக்காளி சட்னி,தேங்காய் சட்னி இரண்டும் இதற்கு ஏற்ற side dish.
-------------
' குதிரைவாலியில்' இட்லி தோசை செய்யலாம். குதிரைவாலி 3 கப்., உளுந்து 1 கப், வெந்தயம் 1 தேக்கரண்டி.
------------------------------


 7. குதிரைவாலி உப்புமா

தேவையானவை:

 குதிரைவாலி 2 கப்

பீன்ஸ் 10

காரட் 2

பட்டாணி 1/2 கப்

தக்காளி 2

வெங்காயம் 2
தண்ணீர் 4 கப்
நெய் 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லித்தழை சிறிதளவு

எலுமிச்சம்பழ சாறு 1 டீஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது
---------

தனியா தூள் 1 டீஸ்பூன்

மிளகாய் தூள் 1 டீஸ்பூன்

வெள்ளை எள் 1 டீஸ்பூன்

நிலக்கடலை 10

-----

செய்முறை:


குதிரைவாலியை சிறிது நெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்.

வெங்காயம்,தக்காளி,பீன்ஸ்,காரட் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தில் எண்ணைய் விட்டு வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

அதனுடன் தக்காளியை சேர்த்து வதக்கவும்.

பின்னர் பீன்ஸ்,காரட்,பட்டாணி, எல்லாவற்றையும் சேர்த்து வதக்கவும்.

காய்கறிகள் நன்றாக வெந்ததும் உப்பு சேர்க்கவும்.

அதனுடன் 4 கப்,தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

வறுத்து வைத்துள்ள  குதிரைவாலியை சிறிது சிறிதாக போட்டு  கிளறவும்.
அடுப்பை ஸிம்மில் வைத்து கிளறவும்.வேகுவதற்கு 10 நிமிடம் ஆகும்.

தனியா தூள்,மிளகாய் தூள் சேர்க்கவும்.

இறக்கிய பின் வெள்ளை எள்,நிலக்கடலை இரண்டையும் வறுத்து பொடி பண்ணி தூவவும்.

கடைசியில் எலுமிச்சம்பழ சாற்றினை சேர்க்கவும்.
--------------------------------


  8 ராகி களி

தேவையான பொருட்கள்

ராகி மாவு - ஒரு கப்
வெங்காயம் 1
பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு துண்டு
நல்லெண்ணைய் சிறிதளவு
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
உப்பு - ஒரு சிட்டிகை
தண்ணீர் -  2 கப்

செய்முறை


முதல் நாள் இரவே ஒரு கப் ராகி மாவுடன் இரண்டு கப் தண்ணீர் தேவையான உப்பு சேர்த்து கரைத்துக்கொள்ளவேண்டும்.

மறுநாள் காலையில்  வாணலியை அடுப்பில் வைத்து சிறிது நல்லெண்ணையில் கடுகு தாளித்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்  இஞ்சி துண்டு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.
பின்னர் கரைத்து வைத்துள்ள ராகி மாவை அதில் ஊற்றி நன்றாக கிளற வேண்டும். சிறிது நல்லெண்ணைய் ஊற்றி கிளறவேண்டும்.


நன்றாக கிளறிய பின் ஐந்து நிமிடம் தட்டு போட்டு முடிவைக்கவும்.
இந்தக்களியை அப்படியே சாப்பிடலாம்.அல்லது 

இறக்கிய பின் தண்ணீர் தொட்டு உருண்டை செய்து கொள்ளவும்.
------
ராகி களியை சிறு சிறு உருண்டைகளாக பிய்த்துபோட்டு தயிர் ஊற்றி தேவையான உப்பு சேர்த்து சின்ன வெங்காயத்துடன் சாப்பிடலாம்.

===========

  9. குதிரைவாலி ( Banyard Millet )பிரியாணி

தேவையானவை:

குதிரைவாலி அரிசி 1 கப்
பீன்ஸ்  10
காரட் 2
உருளைக்கிழங்கு 2
தக்காளி 4
வெங்காயம் 2
இஞ்சி பூண்டு விழுது 2 தேக்கரண்டி
தயிர் 1/2 கப்
மிளகாய் தூள் 1 மேசைக்கரண்டி
தனியா தூள் 1 மேசைக்கரண்டி
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
புதினா 1/4 கப்
கொத்தமல்லி தழை 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
பட்டை ஒரு துண்டு
லவங்கம் 2
பிரிஞ்சி இலை 1
-------
செய்முறை:


பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு மூன்றையும் நீட்டவாக்கில் நறுக்கிக்கொள்ளவேண்டும்.
வெங்காயம்,தக்காளி இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்லவேண்டும்.
--------
குதிரைவாலி அரிசியை 20 நிமிடம் இரண்டு கப் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்
அதனை அப்படியே குக்கரில் வைத்து மூன்று விசில் கழித்து அடுப்பை அணைக்கவேண்டும்.
குதிரைவாலி நன்றாக வெந்திருக்கும்..
-----
கடாயில் எண்ணெய் வைத்து பட்டை,லவங்கம்,பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவேண்டும்.
அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவேண்டும்.(முடிந்தால் இஞ்சியை தனியாகவும்,பூண்டு தனியாகவும் அரைத்து சேர்க்கலாம்)
பிறகு தக்காளி வதக்கி அதனுடன் நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்க்க வேண்டும்.
காய்கறிகள் நன்றாக வெந்ததும் தேவையான உப்பும்,,மிளகாய் தூள், தனியா தூள்,கரம் மசாலா தூள் மூன்றையும் சேர்த்து வதக்கவேண்டும்.
கலவைகெட்டியாக வந்ததும் குக்கரில் இருந்து எடுத்த குதிரைவாலி சாதத்தை போட்டு சிறிது கிளறி  அடுப்பை அணைத்து விட்டு தயிர், கொத்தமல்லித்தழை,புதினா சேர்த்து நன்றாக கிளறவேண்டும்.

தம் கட்டுதல்:
பிரியாணியை ஒரு அகண்டை பாத்திரத்தில் வைத்து ஒரு தட்டு போட்டு மூடவேண்டும்.
பாத்திரத்துக்கும் தட்டுக்கும் இடைவெளி இல்லாமல் ஈரத்துணியால் மூடி  துணியை முறுக்கிவிட்டு தட்டு மேல் ஏதாவது வெயிட்டான பொருளை வைக்கவும்.
சிறிது நேரம் கழித்து திறந்து பார்த்தால் சுவையான குதிரைவாலி  வெஜ் பிரியாணி ரெடி.

--------------------------



10. ராகி (Finger Millet) சத்து மாவு

தேவையானவை:
ராகி மாவு 1 கப்
வறுத்த வேர்க்கடலை 3/4 கப்
எள் 1/2 கப்
பொடித்த வெல்லம் 3/4 கப்
ஏலக்காய் பொடி 1 தேக்கரண்டி
உப்பு தேவையானது
-------
செய்முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தில் ராகி மாவை எடுத்துக்கொண்டு சிறிது உப்பு,வெது வெதுப்பான தண்ணீர் சிறிதளவு சேர்த்து நன்கு பிசறி
குக்கரில் ஆவியில் வைத்து பத்து நிமிடம் கழித்து எடுக்கவும்.ஆறினவுடன் நன்கு உதிர்த்துக்கொள்ளவும்.
எள்ளை வறுக்கவும்.
வறுத்த வேர்கடலை,வறுத்த எள்,பொடித்த வெல்லம்,ஏலக்காய் பொடி நான்கையும் மிக்சியில் பொடி செய்யவும்.
பொடித்த மாவை ஆவியில் வேகவைத்த ராகி மாவுடன் கலந்து எடுத்து வைக்கவும்.
ராகி சத்து மாவில் சிறிதளவு நெய் சேர்த்து உருண்டைகளாக்கி குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
சத்து மிகுந்தது இது
-----------------------------------


11. தினை தோசை

தேவையானவை:
                                                  தினை    

தினை 1 கப்
Brown rice 1 கப்
உளுத்தம்பருப்பு 1/2 கப்
கடலைப்பருப்பு/' 1/2 கப்
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது


=======
செய்முறை:


தினை,brown rice  இரண்டையும் தனித்தனியாகவும் உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு இரண்டையும் ஒன்றாகவும் ஒரு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பின்னர் எல்லாவற்றையும் சேர்த்து நைசாக அரைக்கவேண்டும்.தோசைமாவு பதத்திற்கு அரைத்து தேவையான உப்பு சேர்க்கவேண்டும்.
அரைத்த மாவை ஐந்து மணி நேரம் கழித்து தோசை வார்க்கலாம்..
இதில் அதிக அளவு புரோட்டின் சத்து உள்ளது.


இதற்கு பொருத்தமான் சட்னி வேர்க்கடலை சட்னி.

தேவையானவை:
வறுத்த வேர்க்கடலை 1/2 கப்
தேங்காய் துருவல் 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
கொத்தமல்லித்தழை சிறிதளவு

செய்முறை:
தேவையானவையில் கொடுக்கப்பட்டுள்ள எல்லா பொருட்களையும் உப்பு சேர்த்து அரைக்க வேண்டும்.
பின்னர் கடுகு,உளுத்தம்பருப்பு,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் தாளிக்க வேண்டும்.
-------------------------------


 12.வரகுக் கஞ்சி
 வரகு சிறு தானியங்கள் வகையைச் சேர்ந்தது.
அரிசி கோதுமையைக் காட்டிலும் இதில் நார்சத்து அதிகம்.
புரதம்,கால்சியம்,வைட்டமின் பி ஆகியவை இருக்கின்றன.
காலை உணவுக்கு ஏற்றது.
-------
வரகுக் கஞ்சிக்கு தேவையானது:

வரகு 1/2 கப்
பூண்டு 4 பல்
இஞ்சி ஒரு துண்டு
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
பால் 1 கப்
உப்பு சிறிதளவு
-----
செய்முறை:

இரண்டு கப் தண்ணீரில் அரை கப் வரகரிசியை சேர்த்து வேகவிடவேண்டும்.
குக்கரில் வைக்கவேண்டாம்.
பாதி வெந்ததும் பூண்டு,இஞ்சி,வெந்தயம்,சீரகம் சேர்த்து வேகவிடவும்.
எல்லாம் சேர்ந்து வெந்ததும் பால்,சிறிது உப்பு சேர்த்து இறக்கவும்.
-------
பூண்டு,வெந்தயம்,இஞ்சி சீரகம் சேர்க்காமல் வரகரிசி வெந்ததும் பால்,சர்க்கரை சேர்த்தும் சாப்பிடலாம்.
-----------------------------------------------------


   13.சாமை குழிப்பணியாரம்

தேவையான பொருட்கள்: 

சாமை அரிசி - 1 கப் 
ப.அரிசி -  1/4 கப் 
உளுத்தம் பருப்பு -  1/4 கப் 
கடுகு - 1 ஸ்பூன் 
சீரகம் - 1 ஸ்பூன் 
கேரட் - 2 
காய்ந்த மிளகாய் - 4 
கறிவேப்பிலை - சிறிதளவு 
பெருங்காயத்தூள் - சிறிதளவு 
உப்பு - தேவையான அளவு 
எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை :


கேரட்டை துருவி கொள்ளவும் 

 சாமை அரிசி, ப.அரிசி, உளுத்தம் பருப்பை 2 மணி நேரம் ஊறவைத்து அதனுடன் காய்ந்த மிளகாய் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து உப்பு, கேரட்டை சேர்த்து கலந்து அரைமணி நேரம் ஊற வைக்கவும். 

 கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி அதில் கடுகு, சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து மாவு கலவையில் சேர்த்து நன்றாக கலக்கவும். 

 குழிபணியார கல்லை அடுப்பில் வைத்து அதில் மாவை ஊற்றி வேக வைத்து எடுக்கவும். 

சுவையான சாமை குழிப்பணியாரம் ரெடி
------------------------


                    
14, கேழ்வரகு (Finger Millet) லட்டு

தேவையானவை:                       

கேழ்வரகு மாவு 2 கப்
உப்பு ஒரு சிட்டிகை
----
வேர்க்கடலை 1 கப்
கருப்பு எள் 1 கப்
வெல்லம் 1 1/2 கப் (பொடித்தது)
நெய் 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை:


கேழ்வரகு மாவை சிட்டிகை உப்பு தேவையான தண்ணீருடன் நன்றாக சப்பாத்தி மாவு போல
பிசைந்துகொள்ளவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து பிசைந்த மாவை உருண்டைகளாக்கி
கையால் அடை போல தட்டி இருபுறமும் எண்ணைய் விட்டு சிவந்ததும் எடுக்கவும்.
அடை கொஞ்சம் ஆறியவுடன் சிறு சிறு துண்டுகளாக வெட்டி மிக்சியில் போட்டு பொடி பண்ணவும்.
தனியே எடுத்து வைக்கவும்.

வேர்க்கடலையையும் கறுப்பு எள்ளையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய் விடாமல் வறுத்து
வெல்லத்துடன் சேர்த்து மிக்சியில் பொடி பண்ணவும்..
இந்த பொடியுடன் கேழ்வரகு பொடியை சிறிது நெய் விட்டு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
இது ஒரு வாரம் வரை கெடாது.
பள்ளியிலிருந்து வரும் குழந்தைகளுக்கு இது ஒரு நல்ல சத்துள்ள சிற்றுண்டி.
-------------------------------


15.  வரகு பயத்தம்பருப்பு பாயசம்

தேவையானவை:
 வரகு 1/2 கப்
பயத்தம்பருப்பு 1/4 கப்
பொடித்தவெல்லம் 1 கப்
பால் 1 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
சுக்குப்பொடி 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 5
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:

வரகரிசியை நான்கு மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
பயத்தம்பருப்பை  பொன்னிறமாக வறுக்கவேண்டும்..
ஊறின பின்  வரகரிசியை ஒரு கப்புக்கு இரண்டு கப் வீதம் தண்ணீர் சேர்த்து   குக்கரில் கீழ் அடுக்கிலும் பயத்தம் பருப்பை அரை கப் தண்ணீரில் மேல் அடுக்கில் வைத்து (4 விசில் ) எடுக்கவேண்டும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை அடுப்பில் வைத்து பொடித்த வெல்லத்தை சிறிது தண்ணீருடன் வைக்கவேண்டும்.

வெல்லம் கரைந்து சிறிது கொதித்தவுடன் குக்கரிலிருந்து எடுத்த வரகு,பயத்தம்பருப்பு கலவையை சேர்த்து கிளறவேண்டும்.
எல்லாம் நன்றாக சேர்ந்து கொதித்தவுடன் பாலை காய்ச்சி சிறிது ஆறின பிறகு அதில் ஊற்றவேண்டும்.
ஏலக்காய் தூள்,சுக்குப்பொடி சேர்த்து இறக்கவேண்டும்.
முந்திரிபருப்பை நெய்C

-------------------------------

 16.குதிரைவாலி பிரிஞ்சி

தேவையானவை:

 குதிரைவாலி 1 கப்

பீன்ஸ் 10

காரட் 2

உருளைக்கிழங்கு 1
காராமணி 1/2 கப்

பட்டாணி 1/4 கப்
பச்சைமிளகாய் 2

தேங்காய்பால் 1 கப்
தண்ணீர் 1 கப்

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானவை

-------

அரைக்க:

சோம்பு 1 டீஸ்பூன்

கசகசா 1/2 டீஸ்பூன்

முந்திரிபருப்பு 10

பூண்டு 4 பல்

-----

தாளிக்க:

பட்டை 1 துண்டு

லவங்கம் 2

------

செய்முறை:



குதிரைவாலி அரிசியை நெய்யில் நன்றாக வறுக்கவேண்டும்..

பீன்ஸ்,காரட் இரண்டையும் பொடியாக நறுக்கவும்.

உருளைக்கிழங்கை தோலுரித்து பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

பச்சை மிளகாயை குறுக்கே வெட்டிக்கொள்ளவும்.

அரைக்கக் கொடுத்துள்ளவைகளை விழுது போல அரைக்கவும்.

----

கடாயில் எண்ணைய் வைத்து பட்டை,லவங்கம் தாளித்து பொடியாக நறுக்கிய பீன்ஸ்,காரட்,உருளைக்கிழங்கு,வேகவைத்த காராமணி 

பட்டாணி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் வதக்கவேண்டும்.அரைத்த விழுது,உப்பு சேர்த்து நன்றாக வதக்கவேண்டும்.

வறுத்த குதிரைவாலி அரிசியுடன் தேங்காய்பால் 1 கப்.தண்ணீர் 1  கப் வதக்கிய காய்கறி கலவை எல்லாவற்றையும் நன்றாக கலந்து ele.cookerல்

வைக்கவேண்டும்.

onionரெய்தா,குருமா இரண்டும் இதற்கு ஏற்றது.
----------


17. சாமை பக்கோடா

தேவையானவை:

சாமை மாவு1 கப்
கடலை மாவு 1/2கப்
அரிசி மாவு 1 மேசைக்கரண்டி
வெங்காயம் 2
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லி சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
-------------

செய்முறை:


 சாமை மாவை  லேசாக எண்ணெய் விடாமல் வறுத்துக்கொள்ளவேண்டும்.
வெங்காயம்,பச்சைமிளகாய் இரண்டையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த  சாமை மாவு,கடலைமாவு,அரிசி மாவு,பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,
காரப்பொடி,கறிவேப்பிலை,கொத்தமல்லி,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து முதலில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெயை காயவைத்து மாவில் போட்டு பிசறி
பின்னர் தண்ணீர் விட்டு கெட்டியாக பிசைய வேண்டும்.

அடுப்பில் எண்ணெய் வைத்து காய்ந்ததும் மிதமான் தீயில் பிசைந்த மாவை கொஞ்சம் கொஞ்சமாக தூவ வேண்டும்.
பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.
-----------------------------------------

18. சாமைப் புளிப்பொங்கல்

தேவையானவை:
சாமை ரவை 1 கப்
புளி எலுமிச்சை அளவு
மிளகாய் வற்றல் 4
நல்லெண்ணெய் 2 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
-------

தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
வேர்க்கடலை 5
மஞ்சள்தூள் 1/2 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1/2 தேக்கரண்டி
வெந்தயம் 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து

--------
செய்முறை:


புளியை ஒரு கப் தண்ணீரில் ஊறவைத்து வடிகட்டிக்கொள்ளவும்.
சாமை ரவையை வெறும் வாணலியில் லேசாக வறுத்துக்கொள்ளவும்
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை ரவையுடன் புளித்தண்ணீர் ஒரு கப் தண்ணீர் 1 1/2 கப் சேர்த்து கலந்து வைக்கவும்.( சாமை ரவை 1 கப்,புளித்தண்ணீரும்,தண்ணீரும் சேர்ந்து 2 1/2 கப்)


ஒரு கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெயில் தாளிக்கவேண்டியவைகளை தாளிக்கவும்.
குக்கரில் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சாமை ரவையும் புளித்தண்ணீரும் கலந்த கலவை,
தாளித்த பொருட்கள் எல்லாவற்றையும் தேவையான உப்புடன் கலந்து அப்படியே குக்கரில் வைத்து 3 விசில் முடிந்தவுடன் அடுப்பை அணைக்கவேண்டும்தேங்காய்
வேண்டுமென்றால் அரை கப் துருவல் சேர்த்துக்கொள்ளலாம்..
சுவையான சாமைப் புளிப்பொங்கல் ரெடி.
--------------------------------


19.  தினை உப்புமா




தேவையானவை:             
                                   

 தினை 1 கப்
வெங்காயம் 1
காரட் 2
பட்டாணி 1/2 கப்
உருளைக்கிழங்கு 2
பச்சைமிளகாய் 2
மஞ்ச்ள்பொடி 1 தேக்கரண்டி
இஞ்சி பூண்டு விழுது 1 தேக்கரண்டி
எலுமிச்சம்பழம் 1
உப்பு எண்ணெய் தேவையானது
கொத்தமல்லித்தழை சிறிதளவு
----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
சீரகம் 1 தேக்கரண்டி
-------
செய்முறை:

தினையை எண்ணெய் விடாமல் வாணலியில் 5  நிமிடம் வறுத்துக்கொள்ளவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் தினையை சேர்க்கவும்.
சிறிது உப்பு சேர்த்து தினை வெந்ததும் ஒரு கிளறு கிளறி அடுப்பை அணைக்கவும்,

கடாயை அடுப்பில் வைத்து
சிறிது எண்ணெயில் கடுகு சீரகம் பொரிக்கவேண்டும்.
அதனுடன் மஞ்சள்பொடி,இஞ்சி பூண்டு விழுது,குறுக்கே வெட்டிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவேண்டும்.
வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வரும் வரை வதக்கவேண்டும்.
பட்டாணி,பொடியாக நறுக்கிய காரட்,உருளைக்கிழங்கு தேவையான உப்பு,சிறிது தண்ணீர் சேர்த்து வதக்கவேண்டும்.
காய்கறிகள் எல்லாம் நன்கு வெந்தவுடன் வேகவைத்த திணையை சேர்க்கவேண்டும்.
அடுப்பை ஸிம்மில் வைத்து உப்புமாவை நன்றாக கிளறி ஐந்து நிமிடம் கழித்து அணைக்கவேண்டும்.
எலுமிச்சம்பழச் சாறை சற்று ஆறியதும் பிழயவும்.
கொத்தமல்லிதழையை மேலே அலங்கரிக்கவும்.
---------------------------------

20. தினை அல்வா

தேவையானவை:
தினை 1 கப்
பொடித்த வெல்லம்
நெய் 1 மேசைக்கரண்டி
தண்ணீர் 2 1/2 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 5
--------------
செய்முறை:
தினையை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டி ஒரு துணியில் பரவலாக உலர்த்தவேண்டும்.
தினை நன்கு காய்ந்தவுடன் மிக்சியில் அரைத்து மாவாக்கிக் கொள்ளவும்.
ஒரு கடாயை எடுத்துக்கொண்டு அதில் மூன்று கப் தண்ணீர் உற்றி கொதித்தவுடன் தினை மாவை பரவலாக தூவி கட்டித்தட்டாமல் கிளறவேண்டும்.
தினை மாவு வெந்ததும் பொடித்த வெல்லம்,நெய் சேர்த்து கிளற அல்வா பதம் வரும்.
கடைசியில் ஏலக்காய் தூள்.வறுத்த முந்திரி சேர்க்கவேண்டும்.
-----------------------------------------
 21.வரகரிசி முறுக்கு

வரகரிசி - 1 கப்,
 பொட்டுக்கடலை மாவு - 1 கப், 
கடலை மாவு -1 கப்

வெண்ணெய் - 14 கப்
சூடான எண்ணெய் - 1 டீஸ்பூன், 
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், 
உப்பு - தேவையான அளவு, 
எள்,   அரை டீஸ்பூன், 
ஓமம் அரை டீஸ்ஸபூன் 
உப்பு,எண்ணெய் தேவையானது
---------------
செய்முறை:

வரகரிசியை 3 மணிநேரம் ஊற வைத்து ஒரு துணியில் பரவலாக உலர்த்தவேண்டும்.காய்ந்ததும் மாவாக அரைக்கவும். பொட்டுக்கடலை மாவையும்கடலைமாவையும் சேர்த்து சலிக்கவும். அதை வரகரிசி மாவுடன் கலந்து வைக்கவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு  அதில் வெண்ணெய், வரகரிசி மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலை மாவு.
 எள், ஓமம், சூடான எண்ணெய், உப்பு, மிளகாய் தூள் சேர்த்துப் பிசறி வைக்கவும். தேவையான தண்ணீர் தெளித்து, முறுக்கு மாவு பதத்துக்குப் பிசையவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து காய்ந்த பின் தேன்குழல் படியில் முறுக்கு வில்லையைப்போட்டு,சிறிது மாவை அதில் சேர்த்து எண்ணையில் பிழியவும்.
இரண்டு பக்கமும் நன்றாக வெந்ததும் எடுக்கவும் 
------------


22. குதிரைவாலி குணுக்கு


தேவையானவை:

குதிரைவாலி 1 கப்
புழுங்கலரிசி 1 மேசைக்கரண்டி
துவரம்பருப்பு 1/2 கப்
உளுத்தம்பருப்பு 1/4 கப்
கடலைபருப்பு 1/ 4 கப்
சிவப்பு மிளகாய் 4
பச்சைமிளகாய் 4
வெங்காயம் 1
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை ஒரு கொத்து
கொத்தமல்லித்தழை ஆய்ந்தது சிறிதளவு
எண்ணைய்,உப்பு தேவையானது

செய்முறை:



1. குதிரைவாலியை தனியாகவும்  மற்ற  எல்லா பருப்புகளையும் சேர்த்திம்  ஒரு மணிநேரம் ஊறவைத்து வடிகட்டவேண்டும்.அதனுடன் சிவப்பு மிளகாய்,
பச்சைமிளகாய்,பெருங்காயத்தூள்,உப்பு சேர்த்து சற்று கரகரப்பாக அரைக்கவேண்டும்.

2.அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை ஆகியவற்றை கலக்கவும்.

3.வாணலியில் எண்ணைய் வைத்து அரைத்தமாவை சிறு சிறு உருண்டைகளாக போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.
தக்காளி sauce உடன் சாப்பிட சுவையாக இருக்கும்.
-------------------------------------



23. தினை மாவு தூள் முறுக்கு


தேவையானவை:

 தினை மாவு  1 கப்
பொட்டுக்கடலை மாவு  1 கப்
அரிசி மாவு 1 மேசைக்கரண்டி 
கடலை மாவு 1 கப்
சீரகம் 1 தேக்கரண்டி
வெண்ணெய் 1 மேசைக்கர ண்டி 
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணய் தேவையானது
-----------
செய்முறை:
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் தினை மாவு,  அரிசி மாவு,பொட்டுக்கடலை மாவு,கடலை மாவு  நான்கையும்  சேர்த்து அதனுடன் சீரகத்தை உள்ளங்கையால் தேய்த்து தேவையான  உப்பு,பெருங்காயத்தூளுடன் சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசையவேண்டும பிசைந்த மாவு சப்பாத்தி மாவு பதத்திற்கு இருக்கவேண்டும்.

அடுப்பில் வாணலியை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் தேங்குழல் படியில் முறுக்கு அச்சில் பிசைந்த மாவை சிறிதளவு சேர்த்து எண்ணெயில் பிழியவேண்டும்.இருபுறமும் சிவந்ததும் எடுக்கவேண்டும்.

இந்த முறுக்கு செய்வதற்கும் எளிது ருசியாகவும் இருக்கும்.

---------------------------------------



24. சிறுதானிய லட்டு

தேவையானவை:

வரகு மாவு 1/2 கப்
ராகி மாவு 1/2கப்
சாமை மாவு 1/2 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
நெய் 2 மேசைக்கரண்டி
வறுத்த பாதம் 10
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
-------
செய்முறை:


வரகு மாவு,சாமை மாவு,ராகி மாவு மூன்றையும் தனித்தனியாக வெறும் வாணலியில் சிவக்க வறுக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் சிறிது தண்ணீர் வைத்து அதனுடன் பொடித்த வெல்லத்தை சேர்த்து கம்பிப்பாகு வரும் வரை காய்ச்சவேண்டும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வறுத்த வரகு,சாமை,ராகி மூன்று மாவுடன் வெல்லப்பாகு,உடைத்த பாதம்,ஏலக்காய்த்தூள்
சேர்த்து நன்கு கலந்து நெய்யை உருக்கி அதனுடன் சேர்த்து சிறு சிறு உருண்டைகளாக பிடிக்கவேண்டும்.
சுவையான சிறுதானிய லட்டு ரெடி.

-----------------------------------------------------


25. கேழ்வரகு இனிப்பு உருண்டை

தேவையானவை:
கேழ்வரகு மாவு 2 கப்
நிலகடலை 1 கப்
பொடித்த வெல்லம் 1 கப்
ஏலக்காய் தூள் 1தேக்கரண்டி
உப்பு 1/2 தேக்கரண்டி
நெய் தேவையானது
எண்ணெய் தேவையானது
-------
செய்முறை:
நிலக்கடலையை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.

கேழ்வரகு மாவை எண்ணெயில்லாமல் லேசாக வறுத்துக்கொள்ளவேண்டும்.
வறுத்த மாவை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் சிறிது உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு போல பிசைந்து கொள்ளவேண்டும்.
பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்திபோல் இட்டு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து ஒவ்வொரு சப்பாத்தியாக போட்டு எடுக்கவேண்டும்.
எண்ணெய் ஊற்றிக் கொள்ளலாம்.
சப்பாத்தி நன்றாக ஆறினவுடன் உடைத்துக்கொள்ளவேண்டும்.

ஒரு மிக்சியை எடுத்துக்கொண்டு அதில் முதலில் வேர்க்கடலையை போட்டு ஒரு சுற்று சுற்றி தனியே எடுத்து வைக்கவேண்டும்.
அதன்பின் உடைத்த கேழ்வரகு சப்பாத்தியையும் வெல்லத்தையும் சேர்த்து பொடிபண்ணவேண்டும்.
ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் உடைத்த வேர்க்கடலை,அரைத்த கேழ்வரக, வெல்லம்,ஏலக்காய் தூள் எல்லாவற்றையும் நெய்யை உருக்கி சேர்த்து பிசைந்து உருண்டைகளாக பிடிக்கவேண்டும்.
சுவையான் கேழ்வரகு இனிப்பு உருண்டை ரெடி.
-------------------------------


  26. வரகு அரிசி எலுமிச்சை சாதம்

தேவையானவை:

 வரகு அரிசி 2 கப்
எலுமிச்சம்பழம் 2
மஞ்சள் பொடி 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 1 டேபிள்ஸ்பூன்

பொடிபண்ண:
வெந்தயம் 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 3
உப்பு தேவையானது

தாளிக்க:

கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
மிளகாய் வற்றல் 2 (நாலாக கிள்ளிக்கொள்ளவும்)
நிலக்கடலை 10
முந்திரிபருப்பு 5
பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை 1 கொத்து'

செய்முறை:


ஒரு கப் வரகு அரிசிக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 3 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவேண்டும்.


 குக்கரில் இருந்து எடுத்த வரகு .சாதத்தை ஒரு அகண்ட தட்டில் கொட்டி அதன் மீது மஞ்சள்தூள்,நல்லெண்ணைய் கலந்து ஆறவைக்கவும்.

.வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுக்கவேண்டும்.
சிறிது எண்ணைய் விட்டு மிளகாய் வற்றலை வறுக்கவேண்டும்.
உப்பு வறுக்கவேண்டாம்.
மூன்றையும் பொடி பண்ணி சாதத்தில் தூவவேண்டும்.
.கடைசியாக தாளிக்கவேண்டியவைகளை தாளித்து அதையும் சாதத்தில் கலந்து
எலுமிச்சம்பழம் பிழிய வேண்டும்.
எல்லாவற்றையும் நன்றாக கலந்து எடுத்து வைக்கவேண்டும்.
வரகு அரிசி எலுமிச்சை சாதம் மிகவும் சுவையுடன் இருக்கும்.

-------------------------------------------------------------

27.சிறுதானிய அடை

தேவையானவை:

கம்பு 1/2 கப்
குதிரைவாலி 1/2 கப்
வரகு 1/2 கப்
தினை 1/2 கப்
சாமை 1/2 கப்
-----
புழுங்கலரிசி 1 கப்
துவரம்பருப்பு 1/2கப்
கடலைபருப்பு 1/2 கப்
மிளகாய் வற்றல் 4
பச்சைமிளகாய் 2
பெருங்காயம் 1 துண்டு
கொத்தமல்லித்தழை 1/4 கப்
புதினா 1/4 கப்
------
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:
கம்பை தனியாக 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
குதிரைவாலி,வரகு,தினை,சாமை நான்கையும் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
புழுங்கலரிசி,துவரம்பருப்பு,கடலைபருப்பு மூன்றையும் இரண்டு மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.

ஒரு மிக்சியை எடுத்துக்கொண்டு அதில் ஊறவைத்த எல்லாவற்றையும் சேர்த்து அதனுடன் மிளகாய் வற்றல்,பச்சைமிளகாய்.பெருங்காயம் (ஊறவைத்தது),கொத்தமல்லித்தழை,புதினா,தேவையான  உப்பு சேர்த்து அரைக்கவேண்டும்


அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டியில் அடை மாவை ஊற்றி சற்று கெட்டியாக வார்க்கவேண்டும்.அடை ஒரே பதத்தில் வேகுவதற்காக நடுவில் ஒரு துளையிட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு சற்று நேரம் கழித்து எடுக்கவும்.
---------------------------------------
28. சிறுதானியங்கள் தோசை 

தேவையானவை:
தினை 1 கப்
குதிரைவாலி 1 கப்
சாமை 1 கப்
வரகு 1 கப்
உளுத்தம்பருப்பு 1 கப்
அவல் 2 மேசைக்கரண்டி
வெந்தயம் 1 தேக்கரண்டி
உப்பு,எண்ணெய் தேவையானது
=====
செய்முறை:



மேலே குறிப்பிட்ட ஒவ்வொரு தானியத்தையும் தனித்தனியாக 5,6 மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
(மாவாக தோசைக்கு கரைப்பதை விட தானியத்தை ஊறவைத்து அரைப்பது கூடுதல் ருசியைக் கொடுக்கும்)
உளுத்தம்பருப்பு,வெந்தயம் இரண்டையும்  தனியே 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
அவலை தண்ணீரில் நனைத்து அரைக்கும் போது போடலாம்.
முதலில் நான்கு தானியங்ககளையும் சேர்த்து கிரைண்டரில் அரைமணி நேரம் அரைக்கவேண்டும்.
பின்னர் உளுந்து,வெந்தயம் அவல்மூன்றையும் சேர்த்து அரை மணி நேரம் அரைக்கவேண்டும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த இரண்டு மாவையும் தேவையான உப்பையும் சேர்த்து நன்கு கலந்து வைக்கவேண்டும்.
மாவு 7,8 மணி நேரம் புளிக்கவேண்டும்.
சாதாரணமாக தோசை வார்ப்பது போல் வார்க்கலாம்.
சிறுதானியங்கள் தோசை மிகவும் ருசியாக இருக்கும்.

-----
29. சாமை  உப்புமா

தேவையானவை:

சாமை 1 கப்
தண்ணீர் 2 கப்
மஞ்சள்தூள்
வெங்காயம் 2
கேரட் 1
பட்டாணி 1/2 கப்
இஞ்சி 1 துண்டு
பச்சைமிளகாய் 2
உப்பு,எண்ணெய் தேவையானது
------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கடலைப்பருப்பு 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள் 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
=====
செய்முறை:

சாமையை வெறும் வாணலியில் நன்றாக சிவக்க வறுத்துக்கொள்ளவும்.
வெங்காயம்,கேரட்,இஞ்சி,பச்சைமிளகாய் எல்லாவற்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.
அதனுடன் மஞ்சள்தூள் நறுக்கிய கேரட்,இஞ்சி,பச்சைமிளகாய்,பட்டாணி சேர்த்து வதக்கவும்.
காய்கறிகள் வதங்கியவுடன் தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்கவிடவும்.
பின்னர் வறுத்த சாமையை பரவலாக தூவிக் கொண்டே கிளறவும்.அடுப்பை சிறிதுநேரம் sim மில் வைத்து இறக்கவும்.
இதற்கேற்ற sidedish தேங்காய் சட்னி,வெங்காய சட்னி.
-------------------------------------
 30. தினை...Black Bean சாலட்

தேவையானவை:

தினை 1 கப்
தண்ணீர் 2 கப்
Black Bean 1 கப்
வெங்காயம் 2
தக்காளி 2
Jalapeno 4
எலுமிச்சை ஜூஸ் 1/4 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
-------
செய்முறை:



தினையை ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து ( மூன்று விசில்) எடுக்கவும்.
Black bean ஐ நான்கு மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் வைத்து (மூன்று விசில்) எடுக்கவும்.
வெங்காயம்,தக்காளி,Jalapeno மூன்றையும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
-------
பொடியாக நறுக்கிய வெங்காயத்தை எலுமிச்சை ஜூஸில் ஊறவைக்கவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் வேகவைத்த தினை,வேகவைத்த Black Bean,பொடியாக நறுக்கிய வெங்காயம்,தக்காளி,Jalapeno, எலுமிச்சை ஜூஸில் ஊறவைத்த வெங்காயம்கொத்தமல்லித்தழை,தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து நன்றாக குலுக்கவும்.
இந்த சாலடை diet  ல்இருப்பவர்கள் டின்னராகவும் உபயோகிக்கலாம்.
(Jalapeno பெரிய காய்கறிகடைகளில் கிடைக்கும். இதனை சாலட்டில் சேர்ப்பதால் ஒரு தனி சுவை கிடைக்கும்.)
---------------------------

31. தினை பருப்பு பாயசம்

தேவையானவை:

தினை 1/4 கப்
பயத்தம்பருப்பு 2 மேசைக்கரண்டி
வெல்லம் 3/4 கப்
தண்ணீர் 1 கப்
நெய் 1 மேசைக்கரண்டி
பால் 1/2 கப்
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 10

------
செய்முறை:


தினையையும்,பயத்தம்பருப்பையும் தனித்தனியே நெய்யில் சிவக்க வறுத்துக்கொள்ளவேண்டும்.
தினையை அரை கப் தண்ணீரிலும் பயத்தம்பருப்பை கால் கப் தண்ணீரிலும் தனித்தனியே குக்கரில் வைத்து (மூன்று விசில்)
எடுக்கவேண்டும்.
வெல்லதை கால் கப் தண்ணீரில் கரைய விட்டு வடிகட்டவேண்டும்.
ஒரு கடாயில் வேகவைத்த தினை,பயத்தம்பருப்பு,கரைய விட்ட வெல்லம் மூன்றையும் சேர்த்து கொதிக்கவைக்கவேண்டும்.
வேண்டுமென்றால் சிறிதளவு தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்.
எல்லாம் சேர்ந்து கொதித்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு காய்ச்சிய பால்,ஏலக்காய் தூள்,நெய்யில் வறுத்த 
முந்திரிபருப்பு  சேர்க்கவேண்டும்.
----------------------------------------


 32.  வரகு தேங்காய் சாதம்

தேவையானவை:

 வரகு 1 கப்
தேங்காய் துருவல் 1 கப்
மிளகாய் வற்றல் 2 எண்ணெயில் கடுகு
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
உப்பு தேவையானது
தேங்காய் எண்ணெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை


வரகரிசியை ஒரு கப்புக்கு இரண்டு கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து மூன்று விசிலில் அடுப்பை அணைக்கவும்.

தேங்காய் எண்ணெயில் தேங்காயை வறுத்துக்கொள்ளவும்.
சிறிது தேங்காய் எண்ணெயில் கடுகு,உளுத்தம்பருப்பு,கிள்ளிய மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தாளித்துக்கொள்ளவும்.

ஒரு அகண்ட தட்டில் வரகு சாதத்தை பரவலாக போட்டு அதனுடன் வறுத்த தேங்காய் துருவல்,தாளித்த கடுகு,உளுத்தம்பருப்பு,மிளகாய் வற்றல்,கறிவேப்பிலை தேவையான உப்பு எல்லாவற்றையும் சேர்த்து கலக்கவும்.

-----------------------------------



   33 வரகரிசி புளியோதரை


தேவையானவை:
 வரகரிசி 1 கப்
மஞ்சள்தூள் 1 டீஸ்பூன்
நல்லெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
முந்திரிபருப்பு 5
வேர்க்கடலை 10
கறிவேப்பிலை சிறிதளவு
நெய் 1 டீஸ்பூன்
---------
புளிக்காச்சல் செய்ய தேவையானது:


புளி 1 எலுமிச்சை அளவு
மிளகாய்வற்றல் 4
வெந்தயம் 1 டீஸ்பூன்
கடுகு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
கடலைபருப்பு 1 டீஸ்பூன்
பெருங்காயம் 1 துண்டு

செய்முறை:



வாணலியில் எண்ணைய் விடாமல் வெந்தயத்தை வறுத்து எண்ணைய் விட்டு 2 மிளகாய்வற்றலை வறுத்து இரண்டையும் சிறிது உப்போடு நன்கு பொடி பண்ணிக்கொள்ளவும்.

புளியை  ஒரு கப் தண்ணீரில் கெட்டியாக கரைத்து கொள்ளவும்.

வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் விட்டு கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,மீதமுள்ள 2 மிளகாய்,பெருங்காயம் இவற்றை வறுத்துக்கொண்டு தயாராக உள்ள புளித்தண்ணியை சிறிது உப்புடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.வெந்தயப் பொடியில் பாதியை இதனுடன் சேர்த்து கொதிக்கவிடவேண்டும்.
20 நிமிடங்கள் நன்றாக கொதித்து கெட்டியானதும் இறக்கவேண்டும். இப்பொழுது புளிக்காச்சல் ரெடி.

வரகரிசியைஒரு கப்புக்கு 2 கப் தண்ணீர் வைத்து உதிரியாக குக்கரில் 3 விசில் வரும் வரை வைக்கவும்.
சாதம் ஆறினவுடன் ஒரு தட்டில் பரவலாக போட்டு மஞ்சள் தூள் 2 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணைய் சேர்த்து பிசறவேண்டும்.15 நிமிடம் ஊறவேண்டும்.
பின்னர் செய்து வைத்திருக்கும் புளிக்காச்சலை சேர்க்கவும் மீதமுள்ள பொடியை சேர்க்கவும்..முந்திரிபருப்பு,வேர்க்கடலை,கறிவேப்பிலை மூன்றையும் சிறிது நெய்யில் வறுத்து நன்றாக கலந்து வைக்கவும்.
சுவையான வரகு புளியோதரை ரெடி.
----------------------------

34.ராகி புட்டு.

தேவையான பொருட்கள்:

கேழ்வரகு(ராகி) மாவு -  1 கப்
துருவிய தேங்காய் 1/4 கப்
தூள் வெல்லம் 1/2 கப்
நெய் - 1 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் 1 தேக்கரண்டி
உப்பு  சிறிதளவு

செய் முறை:

ஒரு அகண்ட பாத்திரத்தில் வெள்ளைத் துணி போட்டு, அதன் மீது ராகி மாவை  பரப்பிவிட்டு இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடத்தில் எடுக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து மாவை நன்றாக உதிர்க்கவும்.பின்னர் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து சிறிது உப்பு சேர்த்து பிசிறவும்.
பிசிறிய மாவை மீண்டும்வெள்ளை துணியில் பரப்பி இட்லி குக்கரில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவும்,

குக்கரில் இருந்து எடுத்து தேங்காய் துருவல்,தூள் வெல்லம்,நெய்,ஏலக்காய் தூள் சேர்த்து நன்கு பிசிறவும்.

---------------------------------------------------------


  35.தேனும் தினைமாவும்

தேவையானவை:
தினை 1 கப்
துருவிய வெல்லம் 1/2 கப்
ஏலக்காய்தூள் 1 தேக்கரண்டி
தேன் 2 தேக்கரண்டி
நெய் 2 மேசைக்கரண்டி
------
செய்முறை:

தினையை லேசாக நீர் தெளித்து பிசிறி வைக்கவும்.
அதனுடன் ஏலக்காய் தூள் சேர்த்து பொடிக்கவும்.
ஒரு அகண்ட பாத்திரத்தில் பொடித்த தினையுடன் பொடித்த வெல்லம்,தேன் சேர்த்து பிசையவும்.
தினை மாவுடன் நெய் சேர்த்து உருண்டைகளாக பிடித்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
-------
தேனும் தினையும் மிகுந்த சத்துள்ள உணவு.
சுவையும் நன்றாக இருக்கும்.
தேனும் தினையும் இதிகாச காலங்களிலிருந்து சிறப்பு மிகுந்த உணவாக சொல்லப்படுகிறது
---------

  36.வரகரிசி தயிர் சாதம்

தேவையானவை:

வரகரிசி 1 கப்
தண்ணீர் 3 1/2 கப்
தயிர் 1 1/2 கப்
உப்பு,எண்ணெய் தேவையானது
-----
அரைக்க:
சீரகம் 1 தேக்கரண்டி
தயிர் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 1

----
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு
------
செய்முறை:


வரகரிசியை ஒரு கப்புக்கு 3 1/2 கப் தண்ணீர் வீதம் குக்கரில் வைத்து 4 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
குக்கரில் இருந்து எடுத்து ஒரு அகண்ட தட்டில் ஆறவைக்கவும்.
அரைக்கக் கொடுத்துள்ளவைகளை நன்றாக விழுது போல அரைத்துக்கொள்ளவும்.
------
குக்கரில் இருந்து எடுத்த வரகரிசி நன்றாக ஆறியதும் அரைத்த விழுதை அதனுடன் கலக்கவும்.
தேவையான உப்பு சேர்த்து மேலும் மீதமுள்ள தயிரை ஊற்றி பிசையவும்.
கடைசியில் தாளிக்க வேண்டியவைகளை தாளிக்கவும்.
வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
------------------------

  37. குதிரைவாலி (Banyard Millet) அடை

தேவையானவை:

குதிரைவாலி 2 கப்
புழுங்கலரிசி 1/2 கப்
துவரம்பருப்பு 3/4 கப்
கடலைப்பருப்பு 3/4 கப்
மிளகாய் வற்றல் 5
பெருங்காயம் 1 துண்டு
-----
செய்முறை:

குதிரைவாலியை தனியாக 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
 புழுங்கலரிசி,துவரம்பருப்பு,கடலைப்பருப்பு,மிளகாய் வற்றல்,  நான்கையும் சேர்த்து 4 மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.
பெருங்காயத்தை தனியே ஊறவைக்கவேண்டும்,
எல்லாவற்றையும் சேர்த்து மிக்சியில் சற்றே கரகரப்பாக அரைக்கவேண்டும்.

அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சிறிது எண்ணெய் சேர்த்து ஒரு கரண்டியில் அடை மாவை ஊற்றி சற்று கெட்டியாக வார்க்கவேண்டும்.அடை ஒரே பதத்தில் வேகுவதற்காக நடுவில் ஒரு துளையிட்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி பொன்னிறமாக வந்ததும் திருப்பி போட்டு சற்று நேரம் கழித்து எடுக்கவும்.
------
அடை அவியல் தான் நல்ல காம்பினேஷன். இட்லி மிளகாய் பொடியுடன் தயிர் சேர்த்தும் சாப்பிடலாம்.
பொடித்த வெல்லத்துடனும் சாப்பிடலாம்.
--------------------------

 38.தினை பகாளாபாத்

தினை 1 கப்
பால் 1 கப்
தயிர் 1 கப்
முந்திரிபருப்பு 5

தாளிக்க:
கடுகு 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு 1 டீஸ்பூன்
உளுத்தம்பருப்பு 1 டீஸ்பூன்
பச்சைமிளகாய் 2
கறிவேப்பிலை ஒரு கொத்து

செய்முறை:
தினையை அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்து குக்கரில் ஒரு கப்புக்கு மூன்று கப் தண்ணீர் வைத்து ( 5 விசில்).எடுக்கவெண்டும்.
 குக்கரில் இருந்து வெளியே எடுத்து சிறிது ஆறியவுடன் ஒரு கப் பாலை அதனுடன் சேர்த்து கலக்கவும்.
அரை மணிநேரம் ஊறவிடவும்.
பின்னர் தயிர் தேவவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.

வாணலியில் எண்ணைய் வைத்து கடுகு,உளுத்தம்பருப்பு,கடலைபருப்பு,பொடியாக நறுக்கிய
பச்சைமிளகாய்,கறிவேப்பிலை தாளித்து கலக்கவும்.
முந்திரிபருப்பை பொன்னிறமாக வறுத்து கலக்கவும்.
Fridge ல் ஒரு மணிநேரம் வைத்து பின் சாப்பிடலாம்.
மாதுளம் முத்துகள்,உலர்ந்த திராட்சை சேர்க்கலாம்.

---------------------------------------




  39. கம்பு ( Pearl Idli ) இட்லி

தேவையானது:

கம்பு 3 கப்
உளுந்து 1 கப்
வெந்தயம் 1 மேசைக்கரண்டி
உப்பு தேவையானது
--------

செய்முறை:


கம்பு,உளுந்து,வெந்தயம் மூன்றையும் தனித்தனியே ஆறு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவேண்டும்.
ஊறியபின் வடிகட்டி முதலில் உளுந்தையும் வெந்தயத்தையும் கிரைண்டரில் அரைக்கவேண்டும்.அரைமணி முதல் 45 நிமிடம் அரைக்கவேண்டும், அரைத்ததை தனியே எடுத்து வைத்து விட்டு ஊறவைத்த கம்பை அரைக்கவேண்டும்.
கம்பு நன்றாக அரையவேண்டும்.இரண்டு மாவுகளையும் ஒன்றாகக் கலந்து உப்பு சேர்த்து வைக்கவேண்டும்.
மாவை 8 மணி நேரம் புளிக்கவைக்கவேண்டும்.

புளித்தபின் இட்லி தட்டில் ஊற்றி ஆவியில் வைத்து 15 நிமிடம் கழித்து எடுக்கவேண்டும்.
கம்பு இட்லிக்கு ஏற்ற side dish சாம்பார்,வெங்காய சட்னி.
-----------------------------


  40  சாமை அதிரசம்


தேவையானப் பொருள்கள்:

சாமை _ 2 கப்
வெல்லம்_  1 கப்
ஏலக்காய்_ 2
 எண்ணெய் தேவையான அளவு

செய்முறை:


 சாமையை  சுத்தம் செய்துவிட்டு  சிறிது நீர் தெளித்து கைகளால் பிசைந்து ஊற வைக்கவேண்டும். அதிகமாகத் தண்ணீர் ஊற்றி ஊற வைக்கக் கூடாது. தண்ணீர் அதிகமானால் மாவு இடிக்க வராமல் கொழகொழப்பாகிவிடும். சாமை நன்றாக ஊறிய பிறகு மிக்ஸியில் போட்டு ஈர மாவாக இடித்துக்கொள்ளவும்.

 ஒரு அடி கனமானப் பாத்திரத்தில் வெல்லத்தைப் பொடித்துபோட்டு சிறித் தண்ணீர் ஊற்றி வெல்லம் கரைந்து நுரைத்துக் கொதிக்க ஆரம்பிக்கும். பாகு கெட்டிப் பதம் வந்ததும்   இறக்கி மாவில் ஊற்றிக் கிண்டவும்.(பாகில் ஒரு சொட்டு எடுத்து குளிர்ந்த நீரில் விட்டு விரல்களால் உருட்டினால் பிசுபிசுப்பில்லாமல் உருட்ட வரும்.அதுதான் கெட்டிப் பதம்.) நன்றாகக் கிளறி  கூடவே பொடித்து வைத்துள்ள ஏலக்காயையும் சேர்த்துக் கிளறவும்.நன்றாகக் கிளறிய பிறகு ஆறவைத்து மூடி வை. அடுத்த நாள் அல்லது அன்றே கூட அதிரசம் தட்டலாம்.

ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி மிதமாக சூடுபடுத்தவும்.மாவில் இருந்து ஒரு சிறு எலுமிச்சை அளவு எடுத்து உருட்டி கைகளில் எண்ணெய் தொட்டுக்கொண்டு பிளாஸ்டிக் பேப்பரில் வைத்து சிறு வட்டமாகத் தட்டவும்.இதை எண்ணெய் காய்ந்ததும் போட்டு ஒரு பக்கம் வெந்து சிவந்ததும் திருப்பி விட்டு மறுபக்கம் வெந்ததும் எடுக்கவேண்டும்..இது நன்றாக உப்பிக்கொண்டிருக்கும்.அதனால் எடுத்த சூட்டுடனே ஒரு தட்டில் வைத்து அடி தட்டையான ஒரு கிண்ணத்தால் அழுத்தி எடுத்து பாத்திரத்தில் வைத்துக்கொள்ளவும். இதுபோல் எல்லாவற்றையும் செய்துகொள்ள வேண்டும்
-----------------------------

  41. ராகி ரொட்டி

தேவையானவை:

ராகி மாவு 3 கப்
சீரகம் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 2
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:


அடுப்பில் கடாயை வைத்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் சிறிது எண்ணெய்,உப்பு சீரகம் சேர்த்து அதனுடன் ராகி மாவை பரவலாகத் தூவி கிளறவேண்டும்.அடுப்பை அணைத்துவிட்டு கிளறிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,தேங்காய் துருவல்,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து பிசையவேண்டும்.(வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்,)

கிளறிய மாவை உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் (அல்லது பிளாஸ்டிக் பேப்பரில்) சிறிது எண்ணெய் தடவி
கையால் தட்டி தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவேண்டும்
-----------------------------------

 42. சாமை சீரக சாதம்


தேவையானவை:

 சாமை அரிசி 1 கப்

வெண்ணைய் 2 டேபிள்ஸ்பூன்
சீரகம் 2 டேபிள்ஸ்பூன்
பச்சைமிளகாய் 4
புதினா சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
வெங்காயம் 1
உப்பு தேவையானது

செய்முறை:


சாமை அரிசியை  இரண்டு கப் தண்ணீரில் 20 நிமிடம் ஊறவைக்கவும்.

வாணலியில் வெண்ணைய் வைத்து உருகினதும் சீரகத்தை பொரிக்கவேண்டும்.
அதனுடன் நறுக்கிய பச்சைமிளகாய்,புதினா,கொத்தமல்லித்தழை சேர்த்து வதக்கவேண்டும்.

 இதனை ஊறவைத்த சாமை அரிசி, தேவையான  உப்புடன் கலந்து அப்படியே குக்கரில் வைத்து (மூன்று விசில்) எடுக்கவும்.

வெங்காயத்தை பொடியாக நறுக்கி சிறிது வெண்ணெயில் பொன்னிறமாக வறுத்து சீரக சாதத்துடன் சேர்க்கவேண்டும்.
---------------------------------------

  43.சாமை பிஸிபேளாபாத்

தேவையானவை:   

சாமை அரிசி 1 கப்

துவரம்பருப்பு 1/2 கப்

மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்

தண்ணீர் 7 கப்

புளி ஒரு எலுமிச்சை அளவு

நெய் 1 டேபிள்ஸ்பூன்

உப்பு,எண்ணைய் தேவையானது

------

வெங்காயம் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பீன்ஸ் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

காரட் 1/2 கப் (பொடியாக நறுக்கியது)

பட்டாணி 1/2 கப்

-----

பொடி பண்ண:

கடலைபருப்பு 1 டேபிள்ஸ்பூன்

உளுத்தம்பருப்பு 1 டேபிள்ஸ்பூன்

தனியா 2 டேபிள்ஸ்பூன்

வெந்தயம் 1/2 டீஸ்பூன்

மிளகு 10

வற்றல் மிளகாய் 5

பெருங்காயம் 1 துண்டு

கிராம்பு 2

பட்டை 1 துண்டு

துருவிய தேங்காய் 1/2 கப்

வறுத்து பொடி பண்ணியது:

-------

தாளிக்க:

கறிவேப்பிலை சிறிதளவு

மிளகாய் வற்றல் 2

முந்திரிபருப்பு 10

நிலக்கடலை 10 (உடைத்தது)

-----

செய்முறை:

சாமை அரிசியை ஒரு கப்புக்கு 2 1/2 கப் தண்ணீர் வீதம் வைத்து ஒரு மணி நேரம் ஊறவைக்கவும்.

ஒரு குக்கரை எடுத்துக்கொண்டு அதில் அடி பாத்திரத்தில் சாமை அரிசியை ஊறவைத்த தண்ணீருடனும்  மேல் தட்டில் துவரம்பருப்பை மஞ்சள் தூள் சேர்த்து

ஒரு கப் தண்ணீருடன் வைத்து 6 விசில் விட்டு குக்கரை அணைக்கவேண்டும்.

அரைக்க கொடுத்துள்ளவைகளை எண்ணையில் வறுத்து பொடி பண்ணிக்கொள்ளவும்.

வெங்காயத்தை முதலில் பொன்னிறமாக வதக்கி அதனுடன் மற்ற காய்கறிகளை சிறிது உப்பு சேர்த்து வதக்கிக்கொள்ளவும்.

புளியை ஒரு கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டவும்.

-----

வேகவைத்த சாமை அரிசி சாதம்,பருப்பு இரண்டையும் குக்கர் பாத்திரத்தில் மேலும் ஒரு கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவைக்கவும்.

அதில் வதக்கின காய்கறிகள்,அரைத்து வைத்துள்ள பொடி,தேவையான உப்பு சேர்க்கவும்.

சாதம்,பருப்பு,காய்கறிகள்,பொடி எல்லாம் நன்றாக ஒன்று சேர்ந்ததும் புளித்தண்ணீர் சேர்த்து மீதமுள்ள தண்ணீர் (1 1/2 கப்)

சேர்த்து அடுப்பை ஸ்லிம்மில் வைத்து நன்றாக கொதிக்கவிடவும்..

முந்திரிபருப்பு,நிலக்கடலை,கறிவேப்பிலை,வற்றல் மிளகாய் எல்லாவற்றையும் நெய்யில் வறுத்து சேர்க்கவும்.
------------------------------------


   44..ராகி பக்கோடா

தேவையானவை:

ராகி மாவு -  2 கப்
வேர்க்கடலை - 1/2கப்
பொட்டுக்கடலை - 1/4 கப்
பெரிய வெங்காயம் - 4
கறிவேப்பிலை -சிறிதளவு
மல்லித் தழை - 1/4 கப்
வரமிளகாய் - 5
சீரகம் - 3 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு
-----
செய்முறை:



பெரிய வெங்காயம், மல்லித் தழை, கறிவேப்பிலை ஆகியவற்றை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வரமிளகாய், பாதி அளவு பொட்டுக்கடலை, சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

இவை அனைத்தையும் ராகி மாவில் தேவையான உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

வேர்க்கடலையை ஒன்றிரண்டாக உடைத்துக் கொள்ளவும்.

ராகி கலவையோடு வேர்க்கடலை கலந்து கெட்டியாக பிசையவும்.


வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் உதிரி உதிரியாகப் போட்டு பொரித்து எடுக்கவும்.
----------------------------


 45. சிறுதானிய கார அடை

தேவையானவை:

 கம்பு 1/4 கப்
 கேழ்வரகு 1/4 கப்
 சோளம் 2 மேசைக்கரண்டி
 கொள்ளு 1/4 கப்
 பயத்தம்பருப்பு 3/4 கப் 
 குதிரைவாலி  1/2 கப்
 சாமை  1/2 கப்
 வரகு அரிசி 1/2 கப், 
கருப்பு  உளுந்து 1/4 கப்
 கொண்டைக்கடலை 4 டீஸ்பூன்,
-------------
புழுங்கலரிசி 1/2 கப்
வெங்காயம் 2
 இஞ்சி, 1 துண்டு
 கொத்தமல்லித்தழை சிறிதளவு
 கறிவேப்பிலை சிறிதளவு
 உப்பு,எண்ணெய் தேவையானது
----------
செய்முறை:

 கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பயத்தம் பருப்பு, கொள்ளு. கொண்டைக்கடலை, குதிரை வாலி ,சாமை.  வரகரிசி இவை அனைத்தையும் காலையில்  தண்ணீரில் ஊறவைக்கவும். ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். அடுத்த நாள் காலையில் முளை கட்டி இருக்கும்.(முளை கட்டாத நிலையில் இருந்தாலும் பரவாயில்லை)

முளைகட்டிய எல்லா தானியங்களையும் ஊறவைத்த புழுங்கலரிசி(4 மணி நேரம் ஊறவைக்கவும்)  இஞ்சி, பூண்டு, உப்பு, சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.அரைத்த மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்கொத்தமல்லித்தழை,கறிவேப்பிலை சேர்க்கவும்.

 தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாகத் தட்டி, இருபுறமும்  திருப்பிப்போட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவும்.
----------------------------------

 46.கம்பங்கூழ்


தேவையான பொருட்கள் :
கம்பு மாவு - 1 ௧ப்
உப்பு -தேவையான அளவு 
கரைக்க :
சின்ன வெங்காயம் 7
பச்சைமிளகாய் 2
மோர்-2  கப்
துருவிய மாங்காய் -சிறிது (தேவைப்பட்டால்)
சாதம் - 1/2 கப்
செய்முறை:


கம்பு மாவை  தண்ணீர் விட்டு தோசை மாவை விட கொஞ்சம் நீர்க்க கரைத்துக்கொள்ளவும் ....உப்பு சேர்க்க வேண்டாம் ...
இதை 8 மணி நேரம் அப்படியே புளிக்க விடவும் 


பின்பு ஒரு அடி கனமான பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும் 
அதில் உப்பு ,கரைத்த அந்த கம்பு நீரை விட்டு கிளறவும் 

அடிபிடிக்காமல் விட்டு விட்டு கிளறிக்கொண்டே வந்தால் கம்பு கெட்டியாகி கொதிக்கும் ... 

களி போல வந்ததும் இறக்கி வேறு பாத்திரத்தில் மாற்றவும் 
அதை 6 மணி நேரம் புளிக்க விடவும்

இப்போது கூழ் கெட்டியாக இருக்கும் அதை 1 கை அளவு எடுத்து அதனுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் ,பச்சை மிளகாய் ,மோர், துருவிய மாங்காய் ,சாதம் கலந்து நீர் சேர்த்து கரைக்கவும் ...

இதனுடன் மோர் மிளகாய் ,ஊறுகாய் , வற்றல் போன்றவை தொட்டு கொள்ள சுவை கூடும் ....


குழந்தைகளுக்கு தொட்டுக்கொள்ள வெல்லம்(உடலுக்கு நல்லது )
கொடுக்கலாம் (அபார சுவையுடன் இருக்கும் )(வெல்லத்திற்க்காகவே நிறைய சாப்பிடுவர்கள் ) 

அடுத்த நாள் காலை கூழ் சாப்பிட ,முதல் நாள் காலை மாவை கரைத்து,மாலை 
கூழ் செய்யலாம் 
பயன்கள் :
இதில் புரதம், கொழுப்புச்சத்து, தாது உப்புக்கள் நார்ச்சத்துக்கள்.உள்ளன
------------------------

47  கம்பு ரொட்டி

தேவையானவை:

கம்பு மாவு 3 கப்
சீரகம் 1 மேசைக்கரண்டி
பச்சைமிளகாய் 2
வெங்காயம் 2
தேங்காய் துருவல் 1/2 கப்
கறிவேப்பிலை சிறிதளவு
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு,எண்ணெய் தேவையானது
------
செய்முறை:


அடுப்பில் கடாயை வைத்து 1 1/2 கப் தண்ணீர் விட்டு கொதித்தவுடன் சிறிது எண்ணெய்,உப்பு சீரகம் சேர்த்து அதனுடன் கம்பு மாவை பரவலாகத் தூவி கிளறவேண்டும்.அடுப்பை அணைத்துவிட்டு கிளறிய மாவில் பொடியாக நறுக்கிய வெங்காயம்,பச்சைமிளகாய்,தேங்காய் துருவல்,கறிவேப்பிலை,கொத்தமல்லித்தழை சேர்த்து பிசையவேண்டும்.(வேண்டுமென்றால் சிறிது தண்ணீர் தெளித்துக்கொள்ளலாம்,)

கிளறிய மாவை உருண்டைகளாக உருட்டி வாழை இலையில் (அல்லது பிளாஸ்டிக் பேப்பரில்) சிறிது எண்ணெய் தடவி
கையால் தட்டி தோசைக்கல்லில் போட்டு இரண்டு பக்கமும் திருப்பி போட்டு எடுக்கவேண்டும்-
-------------


 48.வெஜ்  கம்புமாவு ஊத்தப்பம்
தேவையானவை
 கம்பு மாவு -1கப்
இட்லிமாவு -1/4கப்
சின்னவெங்காயம் -5
கேரட்துருவல் -1/4கப்
பச்சைமிளகாய் -1
இஞ்சி -சிறுதுண்டு
கறிவேப்பிலை -சிறிது
உப்பு -தேவையான அளவு
எண்ணெய் தேவையானது
----------
செய்முறை
வெங்காயம்,மிளகாய்,கறிவேப்பிலை,இஞ்சி ஆகியவற்றை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்..
ஒரு பாத்திரத்தில் ராகிமாவு,இட்லிமாவு,சிறிது உப்பு போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து இட்லிமாவு பதம் கரைத்துக்கொள்ளவும்..
அத்துடன் நறுக்கியவற்றை போட்டு கேரட்துருவலையும் போட்டு நன்கு கலக்கவும்.

 தோசைக்கல்லை அடுப்பில்வைத்து காய்ந்தவுடன் ஒருகரண்டி மாவு ஊற்றி  1ஸ்பூன் எண்ணை சுற்றி ஊற்றவும்.
மூடிவைத்து வேகவிடவும்.அடுப்பை சிம்மில்வைக்கவும்.
சிறிது வெந்தவுடன் திருப்பிபோட்டு இருபக்கமும் வெந்தவுடன் எடுக்கவும்.சுவையான வெஜ் கம்புமாவு ஊத்தப்பம்
ரெடி. 
-----------------------------


 49.வரகு போண்டா

தேவையானவை:
வரகு அரிசி மாவு – 3 கப்
கடலை மாவு – 2 கப்
மிளகாய்த்தூள் – 2 தேக்கரண்டி,
சின்னவெங்காயம் – 10
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு தேக்கரண்டி,
சீரகத்தூள் – சிறிதளவு, 
கறிவேப்பிலை – சிறிதளவு,
கொத்தமல்லி – சிறிதளவு
,பெருங்காயம் – ஒரு சிட்டிகை,
 உப்பு – தேவையான அளவு,
 எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.

செய்முறை:


ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்
 எண்ணெய் தவிர்த்து அனைத்து பொருட்களையும் ஓன்றாகக் கலந்து, சிறிது தண்ணீர் சேர்த்து போண்டா மாவுப் பதத்துக்கு கட்டி தட்டாமல் பிசைந்துக் கொள்ளவும்.
 கடாயில் எண்ணெயைக் காயவைத்து, மாவை உருட்டிப் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
இதற்கான் side dish தேங்காய் சட்னி.
------------------




  50 குதிரைவாலி இடியாப்பம்
தேவையானவை:

குதிரைவாலி  மாவு - 2 கப்
தேங்காய் துருவல் 1 கப் 
மஞ்சள்தூள் 1 சிட்டிகை
எலுமிச்சம்பழம் 1
தேங்காய் பால் 1 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
எண்ணெய் தேவையானது
-------
தாளிக்க:
கடு 1 தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை சிறிதளவு

செய்முறை :


குதிரைவாலி மாவை வெறும் வாணலியில் வறுக்க வேண்டும். 
  ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் திரைவாலி மாவுடன் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து  சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவேண்டும்
பின்பு இடியாப்ப அச்சில் நெய்/எண்ணெயை தடவி,  சிறிது பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து, இட்லி தட்டில் பிழிய வேண்டும். அடுத்து இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் பிழிந்து வைத்துள்ள இட்லி தட்டை வைத்து, இட்லி பாத்திரத்தை 10-12 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும். இப்போது சுவையான இடியாப்பம் ரெடி.
இதனை சர்க்கரை மற்றும் தேங்காய் பாலுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

மேலும் வாணலியில் எண்ணெய் வைத்து தாளிக்க வேண்டியவைகளை தாளித்து ரெடியாக உள்ள இடியாப்பத்துடன் 
மஞ்சள்தூள் சேர்த்து எலுமிச்சம் பழம் பிழிந்து எலுமிச்ச சேவையாக சாப்பிடலாம்.

அல்லது தாளிக்க வேண்டியவைகளை தாளித்து  வறுத்த தேங்காய் துருவலை சேர்த்து தேங்காய் சேவையாக சாப்பிடலாம்.

51)தினை பெசரட்

தேவையானவை:
தினை 1 கப்
முழு பச்சப்பயறு 1 கப்

பச்சைமிளகாய் 5
சீரகம் 1 டீஸ்பூன்
இஞ்சி 1 துண்டு
கொத்தமல்லித்தழை 1 கப் (ஆய்ந்தது)
உப்பு,எண்ணைய் தேவையானது
----

செய்முறை

 தினை   அரிசி, முழு பயறு இரண்டையும் நான்கு மணிநேரம் ஊறவைக்கவும்.
ஊறவைத்த   தினை அரிசி.,பருப்பை வடிகட்டி அதனுடன் பச்சைமிளக்காய்,சீரகம்,
இஞ்சி,கொத்தமல்லித்தழை,தேவையான உப்பு ஆகியவற்றை சேர்த்து மிக்சியில்
அரைக்கவேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து கல் காய்ந்ததும் மாவை ஒரு கரண்டி ஊற்றி
மெல்லிசாக வார்க்கவேண்டும்.இறுபுறமும் எண்ணைய் விட்டு பொன்னிறமாக வந்ததும் எடுக்கவேண்டும்.

இந்த தோசையை அரைத்த உடனே சாப்பிடலாம்..
தக்காளி சட்னி,வெங்காய சட்னியுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.




----------

52)வரகு பயறு கிச்சடி

தேவையானவை:

முழு பயறு 1 கப்
வரகரிசி  1/4 கப்
மஞ்சள் தூள் 1 தேக்கரண்டி
பச்சைமிளகாய் 3
இஞ்சி ஒரு துண்டு
பட்டை 1 துண்டு
கிராம்பு 3
சீரகம் 1 மேசைக்கரண்டி
நெய் 1 மேசைக்கரண்டி
தண்ணீர்   5 கப்
கொத்தமல்லித்தழை சிறிதளவு
உப்பு.எண்ணெய் தேவையானது

------
செய்முறை:


முழு பயற்றை நான்கு மணிநேரம் 3 கப் தண்ணீரில் ஊறவைத்து அப்படியே குக்கரில் வைத்து மஞ்சள் தூள் சேர்த்து 6 விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வரகரிசியை ஒரு கப் தண்ணீரில்  இரண்டு மணி நேரம் ஊறவைத்து குக்கரில் வைத்து நான்கு விசில் வந்ததும் அடுப்பை அணைக்கவும்.

ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் சிறிது எண்ணெய் ஊற்றி  பொடியாக நறுக்கிய பச்சைமிளக்காய்,இஞ்சி இரண்டையும் நன்றாக வதக்கவும்.
அதனுடன் குக்கரில் இருந்து எடுத்த முழுபயறு,வரகரிசி இரண்டையும் தேவையான உப்புடனும் மீதியுள்ள ஒரு கப் தண்ணீருடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
எல்லாம் ஒன்றாக சேர்ந்து நன்றாக வெந்தவுடன் அடுப்பை சிம்மில் வைத்து சிறிது நேரத்தில் அணைக்கவும்.

நெய்யில் பட்டை,கிராம்பு,சீரகம் தாளித்து இதனுடன் சேர்க்கவும்.
கடைசியில் கொத்தமல்லித்தழையை தூவவும்.
---------------------------

53)தினை ரவா தோசை

தேவையானவை:
 தினை ரவா - ஒரு கப்
அரிசி மாவு - கால் கப்
தயிர் - ஒரு கப்
தண்ணீர்  2 கப்
இரண்டாக உடைத்த முந்திரிப் பருப்பு - 10 பருப்பு
மிளகு தூள் 1 மேசைக்கரண்டி
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - 2
சீரகம் - அரை தேக்கரண்டி
இஞ்சி 1 துண்டு
வெங்காயம் 2
----------
தாளிக்க:
கடுகு 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை ஒரு கொத்து
மிளகாய் வற்றல் 2
-----------------

செய்முறை:


தினை அரிசியை வெறும் வாணலியில் நன்றாக வறுத்துக்கொள்ளவேண்டும்.வறுத்த அரிசியை மிக்சியில் பொடி பண்ணிக்கொள்ளவேண்டும்.

 ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பொடி பண்ணிய தினை ரவா,அரிசி மாவு,தயிர்,தண்ணீர் தேவையான உப்புசேர்த்து  ஆப்ப மாவை விட இளகியது போல் கரைக்க வேண்டும்.வேண்டுமென்றால் தண்ணீர் சேர்த்துக்கொள்ளலாம்
கரைத்த மாவுடன் சீரகத்தை பச்சையாக சேர்த்து அதனுடன்,மிளகு தூள் பொடியாக நறுக்கிய இஞ்சி,பச்சைமிளகாய்,வெங்காயம் சேர்த்து கலந்து வைக்கவும். கலந்த மாவை அரை மணி நேரம் ஊறவைக்கவேண்டும்.தாளிக்க வேண்டியவைகளை தாளித்து அதனுடன் சேர்க்கவேண்டும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து கல் காய்ந்ததும் மாவை கரண்டியில் எடுத்து
அள்ளி தெளித்த மாதிரி லேசாக ஊற்றி இருபுறமும் எண்ணைய் விட்டு மொறு மொறு என்று வந்ததும் எடுக்கவும்.

இதற்கு சரியான side dish தக்காளி சட்னி,தேங்காய் சட்னி.
----
-------------------
  
54)  ராகி மசால் தோசை

அரிசி மாவு 1 கப்
ராகி மாவு 1 கப்
, உருளைக்கிழங்கு – 2
, பெரிய வெங்காயம், 2
பச்சை மிளகாய் 2
இஞ்சி 1 துண்டு
மசாலா தூள் 1 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் தேவையானது
----
செய்முறை


ராகி மாவுடன் உப்பு, அரிசிமாவு சேர்க்கவும்.அதில், கடுகு, இஞ்சி,பச்சை மிளகாய் தாளித்துக் கொட்டவும்.தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைக்கவும்.

உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து நன் கு மசித்துக் கொள்ளவும்.வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வதக்கி மசித்த உருளைக்கிழங்குடன் சேர்க்கவும்.கரம் மசாளாத்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.தோசையை வார்த்து இருபுறமும் எண்ணெய் விட்டு, தோசையின் நடுவில் உருளைக்கிழங்கு மசாலா வைத்து இரண்டாக மடிக்கவும்.

ராகி மசால் தோசை தயார் 
----------------------------------------------------------------------------

55)தினை நூடுல்ஸ் பிரியாணி

தேவையானவை
தினை   3 கப்
உளுத்தம் பருப்பு  - 3/4 கப்
அவல்    1/4 கப்
வெந்தயம்   - 1 மேசைக்கரண்டி

பிரியாணி செய்ய -

பெரிய வெங்காயம்  - 2
கேரட்    2
பீன்ஸ்   - 10
எலுமிச்சம் பழம்- 1
கொத்தமல்லித் தழை -1/4 கப்
உப்பு, எண்ணெய்  தேவையான அளவு

அரைக்க-

துருவிய தேங்காய்  - 1 கப்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - சிறு துண்டு
சோம்பு - ஒரு மேசைக் கரண்டி

செய்முறை-

தினையைத் தனியாகவும், உளுத்தம் பருப்பு,,வெந்தயம் இரண்டையும் சேர்த்தும் இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

பின், உளுத்தம்பருப்பு, வெந்தயம்,அவல் மூன்றையும் நைசாக அரைக்கவும்

ஊறவைத்தத் திணையை வடிகட்டி நைசாக அரைத்து, ஏற்கனவே அரைத்து வைத்துள்ள உளுத்தம்பருப்பு, வெந்தயம் அவலுடன் சேர்த்து, தேவையான உப்பும் போட்டு நன்குக் கலக்கவும்.

6 மணி நேரம் அதை வைக்க, மாவு புளீத்துவிடும்

பிரியாணி செய்முறை -

புளித்த மாவை இட்லித் தட்டில் ஆவியில் வேகவைக்கவும்.குக்கரி இருந்து எடுத்தத் தினை இட்லியை, இடியாப்ப அச்சில் போட்டு பிழிந்து எடுத்தால் தினை நூடுல்ஸ் தயார்..

அந்த நூடுல்ஸை ஒரு தட்டில் கொட்டி நன் கு உதிர்த்துக் கொள்ளவும்

வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயத்தை முதலில் பொன்னிறமாக வதக்கி, பின் பொடியாக நறுக்கிய பீன்ஸ், காரட் சேர்த்து வதக்கவும்.

அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை விழுதுபோல அரைத்து, இதனுடன் சேர்த்து வதக்கவும்.சிறிது உப்பு சேர்த்து, த்யாராய் உள்ள நூடுல்ஸில் வதக்கிய காய்கறிக் கலவையைச் சேர்த்து நங்கு பிரட்டவும்.பின், எலுமிச்சம் சாறு சிறிது பிழியவும்

தினையில் புரோட்டீன் நார்ச்சத்து உள்ளது.தினையை இட்லியாக சாப்பிட குழந்தைகளுக்கு விருப்பமிருக்காது.அதையே நூடுல்ஸாக மாற்றிக் கொடுத்தால் விரும்பி உண்பார்கள் 


-------------------------------------

56.வரகு முடக்கத்தான் கீரை தோசை

தேவையானவை:
வரகு   1 கப்
முடக்கத்தான் கீரை 1கப்
புழுங்கலரிசி 1/2 கப்
உளுந்து 1/2 கப்
வெந்தயம் 1  தேக்கரண்டி
சீரகம் 1/4 தேக்கரண்டி
மிளகு 1/2 தேக்கரண்டி'பச்சைமிளகாய் 2
இஞ்சி ஒரு துண்டு
உப்பு,எண்ணெய் தேவையானது
------------------
செய்முறை:
வரகையும் புழுங்கலரிசியும்  தனியாக 4 மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.
உளுத்தம்பருப்பு,வெந்தயம்,சீரகம் நான்கையும் இரண்டு மணிநேரம் ஊறவைக்கவேண்டும்.

ஊறவைத்த எல்லாவற்றையும் முடக்கத்தான் கீரையோடு சேர்த்து தேவையான உப்புடன்  நன்றாக நைசாக அரைக்கவேண்டும்.
அரைத்த மாவில் பச்சைமிளகாய்,இஞ்சி இரண்டையும் பொடியாக நறுக்கி போடவேண்டும்.
அடுப்பில் தோசைக்கல்லை  வைத்து மெல்லிய தோசைகளாக வார்க்கலாம்.

வரகில் நார்சத்து உள்ளது.
முடக்கத்தான் கீரையில் நார்சத்தும்,மலச்சிக்கல்,அல்சர் போன்றவற்றையும் குணபடுத்தும்.

------------------------


57)சாமை அரிசிப் பொங்கல்

தேவையானவை:

சாமை அரிசி  1 கப்
சீரகசம்பா அரிசி 3/4 கப

பயற்றம்பருப்பு 1/2 கப்

மிளகு 15

சீரகம் 1 டேபிள்ஸ்பூன்

இஞ்சி 1 துண்டு

முந்திரிபருப்பு 10

நெய் 1/4 கப்

தண்ணீர்  8 கப்

பெருங்காயத்தூள் 1 டீஸ்பூன்

கருவேப்பிலை ஒரு கொத்து

உப்பு தேவையானது


செய்முறை:

சாமை அரிசி,சீரகசம்பா அரிசி பயற்றம்பருப்பு மூன்றையும் தனித்தனியாக வாணலியில் எண்ணைய்விடாமல் வறுக்கவும்

 மூன்றையும்  குறிப்பிட்ட அளவு தண்ணீருடன் குக்கரில் வைத்து.ஆறு விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.அப்பொழுதுதான் நன்றாக குழைவாக இருக்கும்

குக்கரை திறந்தவுடன் உப்பு சேர்க்கவும்.அதனுடன்


மிளகு,சீரகம் இரண்டையும் ஒன்று இரண்டுமாக mixy ல் பொடிபண்ணி சிறிது நெய்யில் பொரித்து சேர்க்கவும்.

இஞ்சியை தோல் நீக்கி பொடிப்பொடியாக நறுக்கி நெய்யில் வதக்கி போடவும்.

பெருங்காயத்தூள்,கருவேப்பிலை இரண்டையும் நெய்யில் பொரித்து போடவும்.முந்திரிப்பருப்பை நெய்யில் பொரித்துப்போடவும்.

கடைசியில் மீதமுள்ள நெய்யை உருக்கி ஊற்றி நன்றாக கிளறி இறக்கவும்.

சுவையான சாமைஅரிசிப் பொங்கல் ரெடி.

-------------



58)சாமை தேன் குழல்


தேவையானவை:
   சாமை  மாவு 4 கப்
பொட்டுக்கடலை மாவு 1/4 கப்
உளுத்தமாவு 1 கப்
சீரகம் 1 டேபிள்ஸ்பூன்
நெய் 1 டேபிள்ஸ்பூன்
உப்பு,எண்ணைய் தேவையானது

செய்முறை:



ஒரு அகண்ட பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில்   சாமை மாவு.,பொட்டுக்கடலை மாவு,உளுத்தமாவு,சீரகம்,நெய்,தேவையான உப்பு எல்லாவற்றையும் போட்டு நன்கு கலந்து வைத்துக் கொள்ளவேண்டும்.
வாணலியில் எண்ணைய் காய வைத்து விட்டு ஒவ்வொரு குழலுக்கும் வேண்டிய மாவை அவ்வப்பொழுது சிறிது தண்ணீர் விட்டு பிசைந்து குழலில் போட்டு எண்ணையில் பிழிந்து வெந்தவுடன் எடுக்கவேண்டும்.

முதலில் போட்டது வெந்து கொண்டிருக்கும்போதே இரண்டாவது குழலுக்கு மாவு பிசையவும்.
எல்லா மாவையும் முதலிலே பிசைந்தால் எண்ணையில் போடும் போது மிகவும் சிவந்து விடும்.

----------------

59)குதிரைவாலி பால் பாயசம்

தேவையானவை:

பால் 5 கப்
சர்க்கரை 1 கப்
குதிரைவாலி அரிசி 1/4 கப்
ஏலக்காய் பவுடர் 1 தேக்கரண்டி
ஜாதிக்காய் பவுடர் 1 தேக்கரண்டி
முந்திரிபருப்பு 5
நெய் 1 மேசைக்கரண்டி
-------
செய்முறை:

குதிரைவாலி அரிசியை சிறிது நெய்விட்டு வறுக்கவும்.

குக்கருக்குள் வைக்கும் ஒரு பாத்திரத்தை எடுத்துக்கொண்டு அதில் பாலையும்  குதிரைவாலி  அரிசியையும் சேர்த்து வைக்கவும்.

' weight ' போடவும். சிறிது நேரத்தில் ' weight ' போடும் இடத்திலிருந்து சிறிது சிறிதாக தண்ணீர் வர ஆரம்பித்ததும் அடுப்பை ஸ்லிம்மில் வைத்துவிட்டு
சரியாக 20 நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். பத்து நிமிடம் கழித்து குக்கரை திறந்து சர்க்கரை சேர்க்கவும். (மீண்டும் கொதிக்க வைக்கவேண்டாம்)

ஏலக்காய்,ஜாதிக்காய் பவுடர் தூவி நெய்யில் முந்திரி பருப்பை வறுத்து போட சுவையான பால் பாயசம் ரெடி.

--------------


60)சாமை கேசரி

தேவையானவை:

சாமை அரிசி 1கப்
சர்க்கரை  1 1/ 2 கப்
நெய் 1 கப்
தண்ணீர்  3 கப்
முந்திரிபருப்பு 1/4 கப்
ஏலத்தூள் 1 தேக்கரண்டி
கேசரிப்பவுடட்  சிறிது


செய்முறை:

சாமை    அரிசியை சிறிது நெய்யில் வறுத்துக்கொண்டு மிக்சியில் ஒரு சுற்று சுற்றவும். ரவை பதம்கிடைக்கும்.

வாணலியில் 3 கப் தண்ணீர் வைத்து கொதித்ததும் சாமை ரவையை தூவவும்.ரவை வெந்ததும் சர்க்கரையை சேர்க்கவேண்டும்.சர்க்கரை கரைந்ததும் ஏலத்தூள், கேசரிப் பவுடர்      சேர்த்து மீதமுள்ள நெய்யை யும் சேர்த்து கேசரி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் வரை கிளறவேண்டும்.
முந்திரிபருப்பை வறுத்து அலங்கரிக்கவும்.



---------